"செகத்தினிற்செல்லுந்
தேசாந்திரிக் கவன் கற்ற வித்தை" என நீதிசாரம் கூறுகிறது. பயணப்படுதல்
என்பது வித்தை. அனைவரும் பயணம் செய்கிறோம், இப்பயணங்களில் யாவும் ஒரு தேவை,
ஒரு நோக்கம், ஒரு ஆதாயம் உள்ளது. ஆனால் இவை எதுவுமே இல்லாமல் உலகை அறிய
பயணப்படுத்தல் ஒரு வரம். அப்படி பயணம் செய்தவர்களின் பெயர்கள் வரலாற்றின்
பக்கங்களில் பொறிக்கப்பட்டுள்ளன, அப்படி பயணப்பட்டவர்களின் பெயர்களை நான்
சொல்ல வேண்டிய அவசியமில்லை. கிரேக்கர்கள், ரோமானியர்கள் என Leif Eriksson தொடங்கி Megasthenes, Colombus, Gama வரை இவ்வுலகறியும்.
"கிணற்றுத் தவளையாக வாழும் மனிதர்கள் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்துவிடுகின்றனர். ஆனால், சுதந்திரத்தோடு தேடல் மனம்கொண்ட மனிதர்கள் உலகத்தை அறியத் துடிக்கிறார்கள். அதற்கு, பயணப்படுதல் அவசியமானது. பயணம் எல்லோருக்கும் வாய்த்தாலும், ரசிப்புத்தன்மையும் கூர்ந்த பார்வையும் இருந்தால் மட்டுமே இயற்கையைக் கற்கமுடியும்" என தேசாந்திரியில் #எஸ்ரா குறிப்பிடுகிறார்.
பல ஊர்களை சுற்றித் திரிந்து அங்கே வாழும் மக்களின் வாழ்வாதாரம், வாழ்வியல் முறை, கலாச்சாரம், இவைகளை கற்றல் என்பது அனைவராலும் செய்ய இயலாத ஓர் காரியம். Embrace of the Serpent என்னும் படத்தில் இரு காலகட்டத்தில் வாழும் நபரின் வாழ்வைப் பற்றியும், Baraka என்னும் ஆவணப்படத்தில் காண்பிக்கும் ஊர்களும் மக்களின் வாழ்க்கை முறையும் நாம் நினைத்துக்கூட பார்க்க இயலாது.
பயணத்தில் மிக முக்கியம் வரலாறு அறிதல். நம்மில் பெரும்பான்மையோருக்கு தங்களின் ஊரின் பெயர்க்காரணமே தெரியாது. இவ்வளவையும் ஏன் மல்லுக்கட்டி (மல்லு"க்"கட்டி இடையில் உள்ள க் எடுத்துவிட்டால் மல்லு கட்ட - ஒரு கேரள பெண்ணை திருமணம் செய்ய. தமிழ் எவ்வளவு இனிமையான மொழி ஒரு சந்திக்கு பல அர்த்தங்கள்) குறிப்பிடுகிறேன் என்றால் ஊர் பெயரில் உள்ள பட்டியை நீக்கிவிட்டு, அள்ளி/ஹள்ளி என மாற்றிவருகின்றனர் தருமபுரி, கிருஷ்ணகிரி, ஒசூர் மாவட்டதில் உள்ளவர்கள்.
வரலாற்றை தலைகீழாக புரட்டிப்போடும் செயலிது. பட்டி - நாம் ஆடு அடைக்கும் இடம் இதன் மூலச்சொல்லே நம் ஊர்ன் பெயர்களில் உள்ள பட்டிகளுக்கு காரணம். இதை யார் சொல்லி மாற்றுகிறார்கள்?
இது கன்னடத் திணிப்பா? இல்லை அரசே செய்கிறதா? இதன் பின்புலம் என்னவென்று ஆராய்ந்து வேறொரு பதிப்பில் சொல்கிறேன்.

No comments:
Post a Comment