Tuesday, August 5, 2014

Man Power Consultancy

சமீபத்தில் நான் கண்ட அதிர்ச்சி Man power Consultancy மூலம் குழந்தை வளர்ப்பு. பெரும்பாலும் சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் வேகமாக பரவி வரும் ஆபத்தான கலாச்சாரங்களுள் ஒன்று. யார் இந்த Man power Consultancyக்கள் என்று சற்று ஆராய்ந்து பார்த்தால் சில திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. பெரும்பாலும் இவர்கள் குறி வைப்பது என்னவோ பணம் மட்டுமே வாழ்க்கை என, ஓயாது எதற்காக சம்பாதிக்கிறோம் என தெரியாமல் இரவும் பகலும் உழைக்கும் I.T ஆடுகளயும், வீட்டில் இருவருமே வேலைக்கு போகும் நிலையில் உள்ளவர்களையும் தான். குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே பெண்கள் மீண்டும் வேலைக்கு சென்றுவிடுகின்றனர், கேட்டால் அனைவரும் கூறும் ஒரே காரணம் "வாழ்க்கையை ஓட்டணும், வீடு வாங்கி செட்டில் ஆகனும்" இதுதான். எனவே குழந்தை வளர்ப்பு பற்றிய ஒரு சிறு அலசல்.

தாயிடம் வளரும் குழந்தை:
இயற்கையால் படைக்கப்பட்ட அனைத்து உயிரினமும் இவ்வுலகை அறிந்துகொள்ள, இயற்கை அறிவை பெற அவரவர் தத்தம் தாயிடமிருந்தே பெறும் வண்ணம் படைக்ககப்பட்டுள்ளன. புலியின் வேட்டையாடும் திறன் அதன் தாயிடம் இருந்து தான் பயிற்றுவிக்கப்படுகிறது, அதே புலி வேறு தாயிடம் வளர்ந்தால் இத்திறணை பெற்றிறாது. முதலை, திமிங்கலம், பனிக்கரடி, பென்குயின், கழுகு என நிலம் நீர் ஆகாயம் மார்கமாக வாழும் அனைத்து உயிறிகளுக்கும் இது பொருந்தும். இவ்வகையிலே மனிதனும் படைக்கப்பட்டிருக்கிறான். ஒரு குழந்தை பிறந்ததில் இருந்து தவழப்பழகி, நடக்கப்பழகி, பேசப்பழகும் வரை ஒவ்வொரு நொடியும் நம் வாழ்வில் ரசிக்க வேண்டிய அழகான தருணங்கள். இதன் வாயிலாக கிடைக்கும் மகிழ்ச்சியே அலாதி தான். இதை கவிஞர் தாமரை 'கண்கள் நீயே' பாடல் வரிகளில் அழகாக கூறியிருப்பார், அதன் வரிகளின் உச்சம் 'கடல் ஐயிந்தாறு மலை ஐயிநூறு
இவை தாண்டி தானே பெற்றேன் உன்னை, உடல் செவ்வாது பிணி ஒவ்வாதுபல நூறாண்டு நீ ஆள்வாய் மண்ணை' என தன் மகன் மீதுள்ள பாசத்தை கொட்டி தீர்த்திருப்பார். உடன் இருந்து இது என்ன, அது என்ன, அது எப்படி, ஏன், எதற்கு என தன் பிள்ளை கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிப்பதில் அல்லவா அனைத்து சந்தோஷமும் ஒளிந்துள்ளது.
இப்படி அனு அனுவாக உடனிருந்து ரசிக்க வேண்டிய மழலை பருவத்தை பணம் சம்பாதிப்பதற்காக தாரைவார்த்துக் கொண்டிருக்கிறது இன்றைய சமுதாயம்.

பாட்டி/தாத்தாவிடம் வளரும் குழந்தை:
இன்னும் சிலர் தன் ஊரிலிருக்கும் அம்மா, அப்பாவை கூட்டிவந்து தங்கள் குழந்தைகளுக்கு பணிவிடை செய்ய வைக்கின்றனர், தங்கள் அலுவலக வேலைகளை முடித்து வரும் வரை இப்பெரியோர்களுக்கு பணியாள் வேலை தான். பாசத்திற்கு ஏங்கியதுதானே முதுமை, மனப்பூர்வமாக வேலையை ஏற்றுக்கொள்கின்றனர். தன் பேரன்/பேத்தி பள்ளி செல்லும் வரை காலத்தை இங்கேயே கழித்துவிடுகின்றனர்.
இவர்களால் வளர்க்கப்படும் பிள்ளைகள் தாயிடம் வளர்க்கப்படும் பிள்ளைகளை போல உலக அறிவை பெற்றிருப்பது ஆச்சரியம் இல்லை.

Baby Sitter எனப்படும் வாடகைத் தாய்:
தாயின் அரவனைப்பில் வளரும் குழந்தைக்கு உலக அறிவு ஊட்டப்படுகிறது, Baby sitter எனப்படும் வாடகை தாய்களுக்கு அது பற்றி எல்லாம் கவலை இல்லை. தாயைப் போல அரவணைத்து கவனித்துக்கொள்ளமாட்டார்கள். அவர்களது வேலை சோறூட்டுவது, குளிக்க வைப்பது, துணிமாட்டி விடுவதுடன் முடிந்து விடுகிறது. இச்சூழலில் வளரும் குழந்தை அனாதை ஆசிரமத்தில் வளரும் குழந்தை போலவே பாசத்திற்கும் உறவுக்கும் ஏங்கி போவதே நிதர்சனம். குழந்தை சாப்பிடுகிறதா என அறிந்துகொள்வதை விட ஊட்டச்சத்துள்ள உணவுகளை சாப்பிடுகிறதா என அறிவதே அவசியம். குழந்தையின் முதல் மூன்று வருடங்கள் மிகவும் கவனிப்புடன் வளர்க்க வேண்டிய பருவங்கள்.
சில நேரங்களில் குழந்தை எதற்காக அழுகிறது என தெரியாமல் எதையோ செய்யும் ஆட்களும் உள்ளனர். "வெள்ளிக்கிழமை ஆனா குழந்தை நெற்றியில் ஏதோ தடவி, எலுமிச்சையை நான்காக அறுத்து தன்னுடன் எடுத்துகொண்டு சென்றுவிட்டார், அன்றிலிருந்து வேலையிலிருந்து நீக்கிவிட்டேன்" என புலம்பிய தாயையும் கண்கூடாக பார்த்திருக்கிறேன்.
இந்த consultancy கள் அனுப்பி வைக்கும் ஆட்களின் பின்புலம், அவர்களின் வரலாறு எதையும் பெற்றோர்கள் தெரிந்துகொள்வதில்லை, அவர்களிடமும் கேட்பதில்ல. சில பெற்றோர்களின் கேள்விகளுக்கு "நம்பிக்கையின் பெயரில் அனுப்பி வைக்கிறோம்” என மழுப்பிவிடுகின்றன இந்த consultancy கள். இவ்வாறு பின்புலம் தெரியாத மனிதர்கள் சில வீடுகளில் தங்கியிருந்து திருடிச் சென்றுவிடுவதும் உண்டு.
நாகரீகம் அறிய, நாட்டுநடப்பு அறிய பெண்கள் வேலைக்கு போவது அவசியம். ஆனால் பணத்தாசையில் குழந்தை பிறந்த 5 மாதத்தில் வேலைக்கு சென்ற பெண்மணிகளும் உள்ளனர். தாய்ப்பால் கொடுத்தால்
முலை பெருத்துவிடும் என்னும் எண்ணம் பரவலாக பரவி இருப்பதால், அதை புறக்கணித்து மாட்டுப்பால் கொடுக்கும் சில பெண்மணிகளும் உளர். நாம் கற்ற அனைத்தியும் நம் சந்ததிகளுக்கு கற்றுக்கொடுக்கும் கடமை நமக்குள்ளது.
5 வயதுக்குள் கற்கும் நாகரீகமே பசுமரத்தாணி போல் பதியும். இந்த குழந்தை பருவத்தை எவருக்கும் தாரைவார்க்காமல் நம் குழந்தையை நாமே வளர்ப்பது நமக்கும் நல்லது, நம் குழந்தையின் எதிர்காலத்திற்கும் நல்லது.

Sunday, April 13, 2014

பெயரிடப்படாத....


வெகுநாட்களாகவே என் மனதினுட் புகுந்து என்னை குடைந்துகொண்டிருக்கிறது ஒரு எண்ணம், அது என்னவெனில் இப்படி போகும் சமூகத்தின் முடிவு தான் என்ன? என்பதே. இதில் அரசியல் புகுக்கவில்லை, அதில் எனக்கு ஆர்வமும் இல்லை. அரசியல் தவிர்த்த சமூக கவலையா? அப்படியென்றால் எதை பற்றியது

வாழ்க்கை பாரபட்சமற்றது அனைவருக்கும் ஒரு வாழ்க்கயை கொடுத்திருக்கிறது, இதில் ஊனில்லாமல் பிறந்தது நாம் வாங்கி வந்த வரங்களுள் ஒன்று. ஆனால் அவ்வாறு நிறைந்து வந்த சிலர், குறையுள்ளவர்களை கேலி செய்வது தான் இங்கே அப்பட்டம், ஒருவேளை அவர்கள் குறையுடன் பிறந்திருந்தால் யாரை கேலி செய்திருப்பார்கள்? சுயசிந்தனை மனிதனுக்கு கிடைத்த மற்றொரு வரம், ஆனால் இச்சுயசிந்தனை வீட்டில் உள்ள வரை மட்டுமே, போதுவிற்க்கு வந்துவிட்டால் ஏளனம், அலட்சியம் ஆட்கொண்டுவிடுகிறது. கண்ட இடத்தில் எச்சில் துப்புதல், குப்பை போடுதல் நமக்கு சாதாரணம், நாம் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டாம் குப்பை அள்ளுபவர்களை ஒரு முறையாவது சிந்திக்க வேண்டாம்? அதற்க்கும் சேர்த்து தான் நாம் வரி கட்டி கொண்டிருக்கின்றோம் என்பதை மறந்துவிட்டு செய்கிறோம்.

 
தொடரும்.........

அட்வைஸ் பன்னா கேட்கவாபோறீங்க?

"அப்பப்பா என்ன வெயில்" அனைவரின் காதுகளிலும் ஒலிக்கும் ஒரு தாரக மந்திரம். காரணம் கேட்டால் ஆண்டவனை குறை கூறுவது. உண்மையில் நீங்கள் செய்த வினையின் பயனே இவ்வளவு கொடூரமான வெயிலுக்கு காரணம்
நாம் என்ன ஆப்ரிக்காவிலா வசிக்கிறோம், இவ்வளவு வெயிலை தாங்குவதற்க்கு? அங்கே தான் ஆளை கொளுத்தும் அனலடிக்கும். ஆனால் அங்கு வசிக்கும் மனிதர்களுக்கு அதை தாங்கும் தோற்பதம் கொடுக்கப்பட்டுள்ளது.
Melanocortin 1 Receptor (MC1R) எனும் மரபணு 1.2 இலட்சம் வருடங்களுக்கு முன்னர் பரிணாம வளர்ச்சியின் காரணமாக கருங்குறங்கிலிருந்து மனிதனுக்கு வந்ததாக அறிவியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இவ்வகை மரபணு மிக அதிகமான அனலையும், கடும் குளிரையும் தாங்கும் விதத்தில் அமைந்துள்ளது.



தொடரும்.........

ஒரு புதிய முயற்சி


பிறந்துவிட்டோம் வளர்ந்துவிட்டோம் என்பதற்காக வாழ்க்கயை வாழ விரும்பாதவர்களின் பெயர்கள் தான் வாழ்க்கையின் பக்கங்களில் பதியப்படுகின்றன, பதியப்படும். இதை நினைக்கையில் ட்விட்டர் சமூகவலைத்தளத்தில் @kurumbuvivek என்னும் நபர் கீச்சிய "என்ன குழந்தை? எந்த ஸ்கூல்? எத்தன அரியர்? என்ன சம்பளம்? எப்போ கல்யாணம்? எத்தன குழந்தைங்க? உடம்புக்கு என்ன ? செத்துட்டாரா?-வாழ்க்கை" இவ்வரிகள் தான் நினைவுக்கு வருகின்றது. நம்முள் பெரும்பாலானோர் வாழும் வாழ்க்கையையே இவ்வரிகள் குறிக்கின்றன. இதிலிருந்து சற்று வேறுபட்டு பயணித்தவர்களின் வாழ்க்கை எவ்வாறு அமைந்தது என்பது கண்கூடு. 



 


தொடரும்..................................