Friday, September 28, 2012

என் பைந்தமிழ் நாடு

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே பிறந்த மூத்த குடி எம் குடி

என்று அனைவரும் அறிவோம் ஆனால் உண்மையிலேயே நாம் அப்படி பிறந்தவர்கள் தான்.
உலகிற்கே நாகரீகத்தை, கலச்சராதை, அறிவியலை  கற்றுத் தந்த என் தமிழ் குடி இன்று பேச்சு வழக்காலும், நாகரீகத்தாலும், அசிங்க பட்டு நிற்கிறது. தமிழனை கொன்று குவித்துவிட்டு குதுகலமாக உல்லாச பயணம் வரும் சிங்கல வெறி நாயை சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்கும் கொடுமை என் இனத்திற்கு நேர்ந்ததை எண்ணி வெட்கப்படுகிறேன்.
நாம் யார் ? நாம் முனோர்கள் உலகறிய எப்படி போற்றப்பட்டனர் ? உங்கள் கேள்விகளுக்கு நான் கேள்விப்பட்ட மற்றும் அறிந்த உண்மைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
  
 இலெமுரியா கண்டம் 

இந்த கண்டம் இருந்தது எத்தனை பேருக்கு தெரியும். ஆம் உலகில் மிக பெரிய கண்டம் நம் தமிழ் கண்டம் தான். இதற்கு பல புராணங்களும் இலக்கியங்களும் எடுத்துக்காட்டு. பண்டைய இந்தியாவில் மொத்தம் 4  பிரிவுகள் இருந்தன அசுரார்கள்(அல்லது இந்து சமவெளி மனிதர்கள் ),  பனியார்கள், யகுவர்கள்(குபேரர்கள் ), மற்றும் மாயர்கள்.
 மாயர்கள் வேறு யாரும்  இல்லை இன்றைய தமிழர்கள் மற்றும் மலையாளர்கள். நம் அறிவையும் படைப்பாற்றலையும் கண்டு உலகமே வியந்தது.  நம் மருத்துவர்கள் பல நாடுகளுக்கு சென்று ஆயுர்வேத வைத்தியம்  செய்து வந்தார்கள். உலகின் தலை சிறந்த வணிகர்களாகவும் விளங்கினார்கள்.  அனைத்திற்கும் மேலாக 9 கோள்களையும் எந்த வித நவீன கருவிகளும் இல்லாமலேயே கண்டறிந்து நவகிரகத்தை உருவாக்கி வழிபட்டனர். நம்மை அணைத்து மக்களும் கடவுளின் பிறப்பு என்றும் அறிய படைப்பு திறன் கொண்டவர்கள் என்றுனம்  எண்ணி மலைத்துபோனர்கள், ஏதோ மனித சக்திக்கு அப்பாற்பட்டவர்கள் என்று எண்ணினார்கள்.
 நம் இந்து சமவெளி அல்லாத மனிதர்கள் நம்மை கண்டு பொறாமைப்பட்டு நம் இனத்தை அழிக்க  முற்பட்டு சிலோனில்( இன்றைய ஸ்ரீ லங்கா ) தஞ்சம் புகுந்தனர். பிறகு அமெரிக்கர்கள், குபேரர்கள் , யகஷர்கள் உடன் கூட்டு சேர்ந்து சுந்கேன் ( சிலோனின் ஒரு பகுதி இன்று சவுத் ஆப்ரிக்காவிடம் உள்ளது) நாட்டில் அடிஎடுதனர். 
அணைத்து விதமான பயிற்சிகளையும் பயின்று கை தேர்ந்தவர்களை அசுர மாயன் என்று அழைத்தனர். அந்த அசுர மாயர்கள் மருவி இன்றைய பிராமணர்களாக மாறினார்கள் அவர்கள் படைத்த தின நாட்காட்டியை தான் இன்று வரை நாம் பயன்படுத்தி வருகிறோம். இவ்வாறே பஞ்சாங்கமும் உருவாகியது. இவர்கள் வாழ்ந்த காலம் கிரிட யுகம் என்று அழைக்கப்பட்டது, இது இன்றைய காலத்தை விட 2.5 கோடி ஆண்டுகள் பழமையானது. நம் மாய முன்னோர்கள் கடைசியாக மடகாஸ்கரில் தன வாழ்ந்தனர். இந்த நிலம் தான் நம்மையும் ஆஸ்திரேலியாவையும் இணைத்து. இதை மயிரைத் எனப்படும் பழங்கால எழுத்தும்  தமிழனின் 
பனைவோலை எழுத்துகளும் உறுதிபடுத்துகின்றன. இந்த போகிஷங்கள் வாடிகனில் உள்ள  போப்களால் இன்னுமும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இதை இந்திய அரசு இன்னமும் உரிமை கோராமல் இருக்கிறது. 
இந்த பசுமை வாய்ந்த லெமுரியா கண்டம் அடிக்கடி ஏற்பட்ட சுனாமியாலும், பூகம்பங்களாலும் அழிந்து குமரி கண்டமாக மாறியது.  


   இயற்கையின் அழிவுகளில் மிகவும் கொடியதாக கருதபடுகிறது இந்த லெமுரியா கண்டத்தின் அழிவு. பின்னர் இந்த குமரிக் கண்டம் பாண்டிய மன்னர்களால் ஆளப்பட்டது. இங்கு  குமரி ஆறு மற்றும் ப்ரஹுளி ஆறு சீறிப்பாய்ந்தது. இந்த இரண்டு ஆற்றுக்கும் இடையில் 700 கவதம்( கிட்டதட்ட 1000 மையில்கள் ) இருந்தது. இங்கு நிலப்பரப்புகள் தெங்கு நாடு,  மதுரை நாடு, முன்பாலை  நாடு, பின்பாலை நாடு, குன்ற  நாடு, குணக்கரை நாடு, குறும்பறை நாடு என்று மொத்தம் 49 நாடுகள் இருந்தன. 
கெம்புக்கல்(மாணிக்கம் ) மனிமலையிலும், தங்கம் மேரு மலையிலும் அளவு கடந்து கிடைத்தது. 
தமிழ் புராதனங்களின் படி  முதல்  தமிழ் சங்கம்  தென் மதுரையில் உள்ள கண்ணி நதிக்கரையில் தான்  நடந்தது இதை இராமயணமும், சாணக்யாவின்  அர்ஷசாஸ்த்ரவும் உறுதி படுத்துகிறது.
இரண்டாம் தமிழ் சங்கம்  கபாடபுரத்தில்  நடந்தது. இடன் பிறகுதான் ஆர்பரிக்கும் கடல் குமரி கண்டத்தில் உள்ள பாண்டியன் நாட்டில் உள்ள  யனை நாட்டின் 1000 மயில்களை விழுங்கியது. இதோடு நம் லெமுரிய மாயர்களின் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. 





இதில் எழுத்து பிழை மற்றும் சந்திப்பிழைகள் இருந்தால் என்னை மனிக்கவும்.

மூலம்: கூகுள் மற்றும் இணையதள புத்தகங்கள். 

No comments:

Post a Comment