அம்மாவின் ஆகப்பெரும் ஏக்கங்களில் ஒன்று பேருந்தில் ஏறிய பிள்ளைக்கு இருக்கை கிடைத்ததா என்பது.
நான் மறந்த விசயங்களுள் அம்மா திருப்பி போடச் சொன்ன தோசையும் ஒன்று.
இளஞ்சூட்டோட நல்லெண்ணெய அம்மா உச்சந்தலைல தேய்க்கும் போது வருமே ஒரு சுகம்!
மூனு துணி துவைச்சதுக்கே வாயில நுரை தள்ளுதே, அம்மா லாம் வேற லெவல் தெய்வம்
உறங்கிக்கிடக்கும் உணர்வுகளை தட்டி எழுப்புவதில் அம்மா போடும் மிக்ஸிக்கு முதல் இடம்.
குழந்தை பெற்றும் என்றும் குழந்தையாகவே வாழும் ஜீவனுக்கு பெயர்தான் அம்மா.
வளர வளர தான் தெரிந்தது என் தோழி ஆயுள் முழுவதும் என்னுடனே வாழ்ந்திருக்கிறாள்!
#அம்மா
அம்மா/தங்கை/மனைவி யை வண்டியின் பின் அமர்த்திச் செல்லும் போது ஏற்படும் விபத்தில் தோன்றுவது தான் உண்மையான குற்ற உணர்வு.
கண்டிப்பாக அவளுக்கு ஒரு ஆசை, விருப்பம், ஏக்கம் இருக்கும். கேட்டால் சொல்ல மாட்டா. விடாம கேளுங்க, தினமும் கேளுங்க. நிறைவேற்றுங்க #அம்மா
ஆடம்பர வீடு தேவை இல்லை, சிறு வயதில் என் வீடாக இருந்த உன் சேலை போதும் #அம்மா #சேலைதொட்டில்
அலாரம் வைத்தாலும் எழ மாட்டோம் என தெரிந்து இறைவன் படைத்த ஜீவன் அம்மா.
அம்மா வழியனுப்ப வேலைக்கு செல்வோர் பாக்கியசாலிகள்.
இவர்தான் அப்பா என உனக்கு அம்மா அறிமுகப்படுத்தும் வரையில் அவரும் அன்னியனே.
அதிக வலியெடுகின்ற போது "அம்மா" என்று கத்தி விடுகின்றது அனாதை குழந்தை.
அம்மாவை கடவுளுக்கு நிகராக பார்ப்பவன் முட்டாள், கடவுள் கூட சில சமயங்களில் கைவிரிக்கும் அனால் #அம்மா ?
ஆயிரம் துண்டுகள் இருந்தாலும் உன் சீலை நுனி தரும் இதம்- சொர்க்கம் #அம்மா
No comments:
Post a Comment