Wednesday, January 10, 2018

ஜெயகாந்தனின் "ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்"

வளர்த்த தந்தையாயினும் நீர்த்த ஒரு வாரத்தின் பிந்தைய பயணங்களில் சோகங்களும், நினைவுகளின் படிமங்களும் நிறைந்தே கனக்கும். இடம்பெயர்தல் என்னும் மாய இருப்பில் புதிய மனிதர்களின் அறிமுகங்களும், அவர்கள் சுமந்த அகங்காரங்களின் அறிமுகங்களும் எதிர்கொள்ளல் என்றுமே ஒரு அறை கூவல்.
இவை அனைத்தையும் எவ்வித வரைமுறையும் இன்றி தகர்த்தெறிகிறான் ஹென்றி. பொதுவில் ஹென்றி ஓர் உலக பிரஜை, சராசரி மனிதர்களின் கட்டுப்பாடுகளும், அடுத்தவர் மீது கொண்ட போலி அபிப்பிராயங்களும் அவனை ஒன்றும் செய்வதில்லை.
பைத்தியக்காரியை நம்முள் ஒருத்தியாக கொண்டாடும் ஹென்றியை, நாம் கொண்டாட வேண்டும்.
ஜெயகாந்தனின் மனிதர்கள் முகமூடிகள் அணிவதில்லை, வாழ்வை அதன் போக்கில் அணுகுகிறார்கள். அன்றாட வாழ்விற்கான ஓட்டங்கள் அவர்களிடையே மிகக்குறைவு. குமாரபுரத்தில் வாழ்ந்துவிட்டு வரலாம்.

ஜெயகாந்தனின் சிறந்த புத்தகம் என்று மற்ற எழுத்தாளர்களும், தன் படைப்பில் சிறந்தது இது என ஜெயகாந்தன் கூறுவதும் "ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்"