Sunday, August 16, 2015

ஓர் அழகிய மரணம்:



கோல் உயரக் குடி உயரும் - பழமொழி, ஆனால் தற்போது குடி உயர கொலை உயருகிறது.

சோகத்திற்கு சரக்கு, சந்தோசத்திற்கு சரக்கு, பிரிவுக்கு சரக்கு, சேர்க்கைக்கு சரக்கு, இன்னபிற எல்லாத்துக்கும் சரக்கு நம் வாழ்வில் அன்றாட ஒன்றாக மாறிய சரக்கு என்னும் உற்சாக பானம். கூச்சமுடன் வளைந்து நெளிந்து தலையில் துண்டு போட்டு, புதுப்பெண் போல அங்கும் இங்கும் நோட்டமிட்டு சாராயக் கடையில் சரக்கு வாங்கியவர்கள் இன்று ஒரு பரபரப்பான தெருவில் 5 ஸ்பீக்கர் கொண்ட பிரம்மாண்ட கருநிற பெட்டியிலிருந்து கற்பூர நாயகியே கனகவள்ளி பாடல் அதிர ஒலித்து இதயத் துடிப்பை உணரச்செய்துகொண்டிருக்க அருகிலிருக்கும் பச்சை வண்ண பதாகைக் கொண்ட வைன் ஷாப்பில் செந்நிற பானத்தை எளிதாக வாங்க முடிகிறது.
அண்ணா விஸ்கில என்ன இருக்கு?
அண்டிகுவிட்டி, ராயல் சாலன்ச் ......
பிராண்டில?
மேக்டலநேல்ஸ், மார்பியஸ், மன்சன் ஹவுஸ்....
டேய் மச்சி என்னடா? எனக்கு கொழப்பமா இருக்கு டா.....
தம்பி சீக்கிரமா சொல்லுங்க நிறைய பேர் நிக்குறாங்க....
அண்ணா ஒரே நிமிஷம் இருணா......
டேய் சீக்கிரமா சொல்லு டா பண்ணி....
மச்சி RC ரண்டு புல் சொல்லுடா, ஒரு 6 பீர் சொல்லுடா பிச்சகாரனுங்க கண்டிப்பா கூலிங் தரமாடனுங்க நாம இப்பவே நம்ம அண்ணாச்சி கடைல குடுத்துரலாம்......
எவ்ளோ ண்ணா ஆச்சு?

2340 தம்பி....

நாசமா தாண்டா போவீங்க (முனுமுனுப்புடன்) இந்தாங்க....
குடித்து அழிப்பது இவன் விற்பவனை நாசமாக போகச் சொல்கிறான். இது அநேகமாக ஒரு மாத இறுதியின் அத்யாவசிய பழக்கங்களுள் ஒன்றிவிட்டது. இது ஒருபுறம் என்றால் கணவனும் மனைவியும் சிறிது ஆடம்பர மால்களில் இருக்கும் மதுலோக்ஹா, எலைட் பார்களில் இருவரும் சேர்ந்தே வாங்கும் மார்டன் பழக்கம். வட இந்தியாவிலிருந்து தொற்றுன்னியாக பரவிவரும் இன்னொரு காய்ச்சல்.

நாம் ஏன் இந்த கலாசார விவாதத்திற்கு வந்தோம் .....எங்கோ ஆரம்பித்து எங்கோ பொய் விட்டோம்..சரி நம்ம பசங்க கிட்ட வருவோம்.
விரைகிறது நேராக சைடிஸ் கடைக்கு நமக்கெனவே உண்டாக்கிய HOT Chips கடைகள், வாங்கிய பாட்டில்கள் கிளிங் கிளிங் என பைகளில் சத்தமெழுப்பிக்கொண்டிருக்க,
அண்ணா முறுக்கு பாக்கெட், மிச்சர் பாக்கெட்
மச்சி எனக்கு அப்படியே ஒரு ஸ்வீட் பாக்கெட் டா.....
போய்த்தொல ..... அண்ணா அப்படியே ஒரு ஸ்வீட் பாக்கெட்....

மச்சி அப்படியே அவங்க நாலு பேருக்கும் போன் பண்ணி வரச்சொல்லு டா......

பொத்தான்களில்லாத அந்த செங்கலில் இருந்து நால்வருக்கும் அழைப்பு விடுத்து நேரம் மேம்படுத்தியாயிற்று. அந்நால்வரில் ஒருவர் தான் இக்கதையின் நாயகன் ஆதவன். திருமணமாகி 4 வருடங்களாகிருது ஒரு கைக்குழந்தை மற்றுமொரு இரு வயது நடைப்பழகிய குழந்தை. அழகான குடும்பம் ஆசைக்கு ஒரு பொண்ணு, ஆஸ்திக்கு ஒரு பையன் வாழ்வின் அழகான தருனங்களுடன் மனைவியிடம் செலவிட வேண்டிய கணங்கள் அவை. ஒரு தனியார் கம்பனியில் வேலை 9 - 5 ஆம் அடே மேனேஜரின் உத்யோகம் தான் ஆனால் மேனேஜெர் வேலை அல்ல. மாநிறம் தான் அனால் அழகி மைத்திரை . கொடியிடை என்ற ஆயுதத்தின் மூலம் சிறை பிடித்தவள் ஆதவனை.
திருமணத்தின் பின் காதலிக்க தொடங்கினர், ஓர் அற்புத அன்யோன்யம் பரவ தொடங்கியிருந்த வேலையில் தலைவனிடம் இருக்கும் அக்குடி பழக்கத்தை கண்டறிகிறாள். சிறிய சலனத்துடன் முதல் சண்டை ஒரு வாரம் நீடித்தத. ஒரு சத்தியத்தின் பின்னான அரவணைப்பில் கரைந்தது அச்சண்டை. நாட்கள் நீண்டன இதோ இன்று வரை.
பாப்பு(மைத்திரை) நான் 9 மணிக்கு வந்துருவேண்டி, சாப்பாடு வேணா....இங்க ஒரு ப்ரெண்டோட பர்த்டே அங்கேயே சாப்பாடு. நீயும் தம்பியும் சாப்டுங்க....
எனக்கு எதுனா வாங்கிட்டு வாங்க...
எனக்கு ஸ்வீட் சாப்டனும் போல இருக்கு...
சரி டி வாங்கிட்டு வரேன்.... வேற என்ன வேணும் என் தங்கத்துக்கு...
தங்கம்தான்..
லூசு.....லூசு....
ஏன் வாங்கித்தரமாடீங்களா?
உனக்கு இல்லாடதா டி...
ஆமா பேச்சு ஒன்னு தான்...
அம்மணிக்கு என்ன செய்யணுமாம்?
..........
ஏய்?
.........
பாப்பா அழுவுறா....நா வைக்குறேன் ...சீக்கிரமா வந்துடுங்க....
சரி டி...

விரைந்தான் ஆதவன் ஸ்பாட்டுக்கு...ஏற்கனவே பீரில் ஆரம்பமாயிருண்டது கச்சேரி....
இதோ வந்துட்டாருடா ஆபீசர்.....வாங்க ஆபீசர்....
மச்சி இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரம் போகணும் டா எனக்கு ஒரு கட்டிங் மட்டும் போதும் டா..
சரி நீ அப்படியே கெளம்பிடு...
புரிஞ்சிகொங்கடா ப்ளீஸ்...
சரி வா டா ரொம்ப சீன் போடாத....ஒரு கட்டிங் போடு....
கிளாஸ் நிரம்பியது....1..........2.................3............................4.......................................... 5...............................................#$#&%$*$(%^&*%#@!%^$#+"?. செவ்வாய் கிரகத்திற்கு மிக அருகில் இருக்கிறார்கள் அனைவரும். மணி ஒலித்தது....அலறி பொய் எடுத்தான் போனை....
பாப்பாப்பா கெளள்ம்பிட்டேன் டா இந்தோ வந்துர்ர்றேன்...
குடிச்சுரிக்கியா?????
இல்ல்ல்ல்லையே ....நான் புய் கூடிப்பனாஅஆ
எப்படியோ பொய்த் தொல....
சிறிது நேர மௌனத்திருக்கு பின்
மச்சிசி நான் கெளள்ம்புறேன் டா ....
பாத்து போ டா.....
கலவர முகத்துடன் கிளம்பினான்...சீறிப்பாய்ந்தது பைக்...திடீரென ஒரு ஆட்டோ குறுக்கே வந்தது..
ஏய்... ஏய்.... ஏய்
சுதாரித்து இடப்புறம் திருப்பி சீறாக வண்டியை திருப்பி சமாளித்துவிட்டான் பெருமூச்சுடன்...எதிரே வந்த காரை பார்க்காமல்.
..டிச்ஷ் ....கீரீச் .....டிச்ஷ் டின்ங்க் .....
ஏ வாங்கப்பா யாரோ கீழ உழுந்துட்டான் பா....ஒரே நாத்தம் குடிச்சுருகான் டா..கருமம் ...
வாழையிலையில் சுத்தப்பட்டிருந்த அல்வா மண்ணோடு கலந்து சிதரியிருந்ததை அரைக்கண்ணால் பார்த்தான்...என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன் பாடல் அழைப்பேசியில் எங்கோ தூரத்தில் ஒலித்து அடங்கியது.......................
</div>