முதல் நினைவு
எங்கோ தூரத்தில் கேட்கிறது அக்குரல், எனக்கு முத்தமிட்டு தலைக்கோதி சீலைத்தொட்டிலில்(யாணை என்னும் பேச்சு வழக்கு உள்ளது) இட்டுச்சென்ற அந்த பாவியின் குரல். வெகு தொலைவில், பத்தடி தூரம் உள்ள பக்கத்து வீட்டிற்கு சென்றுவிட்டாள் . வெறுமை சூழ்ந்த சில கணம், எப்படி அழைப்பது அவளை? பேச்சும் வராது, வெறும் ங்ஙே மொழி மட்டும்தான். எவ்வளவு மாத்திரை கொண்டு ஒலிக்க வேண்டும் இச்சொல்லை, அவளுக்கு கேட்குமாறு இந்த "ங்ஙே"வை.
வார்த்தை வெளிவரும் முன் தாரைத்தாரையாய் கண்ணீர் மட்டும் வழிந்து சீலையின் ஒரு பக்கத்தை நனைத்துக் கொண்டிருக்கிறது. அதென்ன இதழோரம் ஒரு ஜோனை வழிகிறது, அது வாய்க்கு கண்ணீர் போலும்.
யுகமே கடந்துவிட்டது எங்கே போனாள்? ஆ! ஏதோ ஓர் அதிர்வு தெரிகிறது. "அச்சச்சோ ஏண்டா அழுவுற, அம்மா இங்கதாண்டா இருக்கேன்" அள்ளி எடுத்து இடுப்பில் அமர்த்தி சீலையில் முகம் துடைத்தாள். முதலில் கண்ணில் வழிந்ததை, பிறகு வாயில் வழிந்ததை "ஜொள்ளு பையா" என்று.
இதுதான் என்னுடைய முதல் நினைவு, கிட்டத்தட்ட 1 1/2 வயதிருக்கலாம். அவளிடம் பலமுறை இதைச் சொல்லிவிட்டேன், ஆனால் அம்மாவிற்கு நினைவில்லை.
எனக்கென்னவோ இவ்வொரு நினைவுதான், ஆனால் வாழும் ஒவ்வோர் கணமும் வரமென கருதும் அவளுக்கு நினைவில் கொள்ள ஒன்றா, இரண்டா? மறந்திருப்பாள் போலும் என் அம்மா.